இஸ்ரேல் தாக்குதலில் 23 பேர் உயிரிழப்பு!
காசாவின் ஷிஜையா நகரில் உள்ள நான்கு மாடிக் கட்டிடம் மீது இஸ்ரேல் விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 23 பேர் உயிரிழந்ததாக காசாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவரைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.