தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டர் : உயிர் தப்பிய தந்தை, மகன்!
கேரளாவில் சாலையில் சென்ற ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. பாலக்காடு அடுத்த மன்னார்க்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது ஆறு வயது மகனுடன் ஸ்கூட்டரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஸ்கூட்டர் தீப்பற்றவே, உடனடியாக இருவரும் கீழே இறங்கினர். இதுதொடர்பான வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.