நேற்று ஜூலை 14, 2023 நடைபெற்ற பாஸ்டில் தின அணிவகுப்பில் இந்திய அணியினர் பங்கேற்றனர். இந்தியா-பிரான்ஸ் உறவுகளின் வரலாற்றில் பொறிக்கப்படும். முன்னதாக, பாஸ்டில் தின அணிவகுப்பிற்காக பாரிஸில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்ப்ஸ்-எலிசீஸ் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைதந்தார். அதைத்தொடர்ந்து Champs-Elysées பிரஞ்சு கொடியின் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் வண்ணம் பூசப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் மோடியும் பிரான்ஸ் முப்படையினரின் கவுரவக் காவலை பார்வையிட்டார். பாஸ்டில் தின அணிவகுப்புக்கு ‘கெளரவ விருந்தினராக’ பிரதமர் மோடி பிரான்சுக்கு அழைக்கப்பட்டார்.
அவரை பிரான்ஸ் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரான் மற்றும் பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் ஆகியோர் வரவேற்றனர். இந்தியாவும் பிரான்சும் தங்கள் மூலோபாய கூட்டாண்மையின் 25 ஆண்டுகளைக் கொண்டாடுகின்றன.