எப்.பி.ஐ எனப்படும் மத்திய விசாரணை அமைப்பான அமெரிக்காவின் புலனாய்வு துறையின் இயக்குனராக கிறிஸ்டோபர் ரே உள்ளார்.
இந்நிலையில் உதா மாகாணத்தின் புலனாய்வு துறைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷோஹினி சின்கா என்ற பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஷோஹினி இதற்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வு துறையின் இயக்குனரான கிறிஸ்டோபர் ரேயின் சிறப்பு உதவியாளராக இருந்துள்ளார். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணை குழுவின் உயர் அதிகாரியாகவும் பணியாற்றி பல்வேறு சாதனைகளைப் புரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2001-ம் ஆண்டில் புலனாய்வு துறை அதிகாரியாக பணியில் சேர்ந்த இவர் குவாண்டனாமோ பே கடற்படைத்தளம், மற்றும் பணிபுரிந்துள்ளார்.
இவர் கனடாவை தலைமையிடமாக கொண்டு வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் திட்டத்தின் மேலாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார். மனோதத்துவத்தில் பட்டம் பெற்ற ஷோஹினி சைபர்-ஊடுருவல் குறித்து ஆய்வு அறிக்கை சமர்பித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.