டைரக்டர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி, 10 மாதங்கள் ஆனாலும், இதுவரை தங்களது குழந்தைகளின் முகத்தை காட்டியதே இல்லை. விக்னேஷ் சிவன் பதிவிடும் புகைப்படங்களில் கூட குழந்தைகளின் முகத்தை மறைத்தபடியே பதிவிடுவார்.
இந்த நிலையில், தற்போது இருவரும் தங்களது மகன்களுடன் ஓணம் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி வீட்டிலேயே கொண்டாடி இருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் மகன்கள் இருவரும் பட்டுவேட்டி கட்டி அமர்ந்திருக்க, அவர்களுக்கு தலைவாழை இலை போட்டு விருந்து பரிமாறி அதனை நயன்தாரா ஊட்டி விடும் காட்சி இடம்பெற்றுள்ளது. எங்கள் ரத்தமார்ஸ் உடன் முதல் ஓணம் என குறிப்பிட்டு,
அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ரத்தமாரே என்கிற பாடலையும் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.