7ஜி ரெயின்போ காலனி- 2 பாகத்தில் ‘ராங்கி’ படத்தில் திரிஷாவின் அண்ணன் மகளாக நடித்த மலையாள நடிகை அனஸ்வர ராஜன் தான் இந்தப் படத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் செல்வராகவன் டைரக்ஷனில் ரவிகிருஷ்ணா நடிப்பில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்திற்கு தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுது.
19 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் 2-ம் பாகம் எடுக்க, இயக்குனர் செல்வராகவன் தயாராகி இருக்கிறார். அதன்படி இன்னும் ஓரிரு மாதங்களில் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.
முதல் பாகத்தைப் போலவே, இந்த படத்திலும் ஹீரோவாக ரவிகிருஷ்ணா நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் திரிஷாவின் ராங்கி படத்தில் நடித்த அனஸ்வர ராஜன் 7ஜி ரெயின்போ காலனி 2 -வில் ஹீரோயினாக நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அனஸ்வர ராஜன், இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.