ஹரியாணாவின் ஜாஜ்ஜார் பகுதியில் இன்று ( வெள்ளிக்கிழமை) மதியம் 12.29 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.
இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.