ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியில் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கிறார்.
கடந்த வாரம் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
இந்த சூழ்நிலையில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, இறுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பில் 80.79 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து, 2 மற்றும் 3-வது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். 4-வது வாய்ப்பில் 85.22 மீட்டர் தூரம் எரிந்தவர், 5-வது வாய்ப்பில் மீண்டும் ஃபவுல் செய்தார். இறுதி வாய்ப்பில் 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜாகுப் வாட்லெஜ் 85.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்தார்.
இதே தடகளப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் 7.99 மீட்டர் உயரம் தாண்டி 5-வது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Incredible effort from our World Champion @Neeraj_chopra1 at #ZurichDL!
2nd place finish with a huge throw of 85.71m and a spot in his 2nd consecutive #DiamondLeague Final💪
The nation rallies behind you and supports you, Champ. You have given 🇮🇳 countless moments to rejoice,… pic.twitter.com/jqdWbcYewG
— Anurag Thakur (@ianuragthakur) September 1, 2023
இதுகுறித்து, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தனது எக்ஸ் பக்கத்தில், “நமது உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா 2-வது முறையாக டயமண்ட் லீக் இறுதிப் போட்டி வரை சென்று இம்முறை 85.71 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
தேசம் உங்களை அணி திரண்டு ஆதரிக்கிறது வீரரே. நீங்கள் எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களை இந்தியாவிற்கு கொடுத்திருக்கிறீர்கள். அதில் இதுவும் ஒன்று. உங்களின் அசாத்தியமான மன உறுதி உண்மையிலேயே பாராட்டுக்குரியது” என்று தெரிவித்திருக்கிறார்.