இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே சிவன், மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தூர் ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக 2019 -ம் ஆண்டு முதல் பதவி வகித்த பேராசீரியர் தீபக் பி பாதக்கின் பதவிக்காலம் ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து, அந்த பதவிக்கு, இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் கே. சிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் கே. சிவன் தலைமையில் சந்திரயான் 2 திட்டம் தயார் செய்யப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே, சந்திரயான் 3 திட்டம் தயார் செய்யப்பட்டு, வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது
இந்த நிலையில், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர். கே. சிவன், ஐஐடி ஆளுநர் குழுவின் தலைவராக இருப்பதில் பெருமை அடைகிறோம் என இந்தூர் ஐஐடி தெரிவித்துள்ளது.
டாக்டர் சிவன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வழியில் கல்வி பயன்றவர். மதுரை பல்கலைக்கழகத்தில், பி.எஸ்.சி கணிதம் முடித்ததும், சென்னை எம்.ஐ..டியில் ஏரோ நாட்டிக்கல் பொறியில் துறையில் கல்வி பயின்றார்.
1982-ம் ஆண்டு, விண்வெளி ஆராய்ச்சி பணியில் சேர்ந்த பணியில் சேர்ந்த டாக்டர் கே.சிவன், 2015 -ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பதவியேற்றார்.
2018 -ம் ஆண்டு இஸ்ரோ தலைவராகப் பதவியேற்ற டாக்டர் கே.சிவன், 2022 -ம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.