இஸ்ரோ வடிவமைத்துள்ள ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலம், சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளது.
முதன்முதலில் சூரியனை ஆய்வுசெய்ய இந்தியா அனுப்பும் முதல் விண்கலம் ஆதித்யா எல்-1,பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்னும் இடத்தில், நிலை நிறுத்தப்படுகிறது.
இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ஏவுகணைக்கு எரிபொருள் நிரப்பும் பணி முடிந்து, விண்ணில் செலுத்துவதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ஏவுகணை மற்றும் விண்கலத்தின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ஏவுகணை மூலம் திட்டமிட்டப்படி ஆதித்யா எல்-1 இன்று பகல் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.