"மகேந்திரகிரி" போர்க்கப்பல் : நாட்டுக்கு அர்ப்பணிப்பு!
Sep 9, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“மகேந்திரகிரி” போர்க்கப்பல் : நாட்டுக்கு அர்ப்பணிப்பு!

Web Desk by Web Desk
Sep 2, 2023, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிநவீன அம்சங்களுடன் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள மஸகான் கப்பல் கட்டும் களத்தில் கட்டப்பட்ட அதிநவீன மகேந்திரகிரி போர்க்கப்பலை குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மகேந்திரகிரி கடற்படைக்காக `புராஜக்ட் 17 ஆல்ஃபா’ (பி17ஏ) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 7-வது போர்க் கப்பல் ஆகும். எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், அதிநவீன ஆயுதங்கள், தொலையுணர்வு சாதனங்களுடன் கூடிய இந்தப் போர்க் கப்பல், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி வல்லமையின் அடையாளமாக திகழுகிறது.

புதிதாகப் கட்டப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல், ஒரு தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அதிநவீன போர்க்கப்பலாகும். உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயார் செய்யப்பட்ட கப்பல்களில் மிகவும் முன்னேறிய வகையைச் சார்ந்தது. எனவே, எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது.

 மகேந்திரகிரி போர்க்கப்பல் 149 மீட்டர் நீளம், 17.8 மீட்டர் அகலம் கொண்டதாகும். மேலும் 28 நாட்டிக்கல் மைல் வேகத்தில் கடலில் செல்லக் கூடிய சக்தி படைத்தது.

பி17-ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் எஞ்சியுள்ள கப்பல்கள் 2024 முதல் 2026-ம் ஆண்டுக்குள் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்திய பசுபிக் கடல் பகுதியில் சீனாவின் மக்கள் சுதந்திர இராணுவ-கடற்படையினரின் சவால்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.

பி17-ஏ திட்டத்தின்கீழ் மொத்தம் 7 போர்க் கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, கடந்த2019 முதல் 2022 வரை 5 போர்க் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

இந்த வரிசையில் 6-வதாக விந்தியகிரி என்ற போர்க் கப்பலைகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார். பி17ஏ போர்க் கப்பல்களின் கட்டுமானத்துக்காக 75 சதவீத உபகரணங்கள் மற்றும் இதர அமைப்பு முறைகள், உள்நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்துக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: 'Mahendragiri' shipVice-President Jagdeep Dhankhar
ShareTweetSendShare
Previous Post

சிங்கப்பூர் அதிபர் தேர்தல்: தமிழர் வெற்றி!

Next Post

நடிகர் மாதவனுக்குப் புதிய அரசு பதவி!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies