இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நடிகர் மாதவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில், “இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்களின் பரந்த அனுபவம் மற்றும் வலுவான நெறிமுறைகளும் இந்த நிறுவனத்திற்குப் பயன்படும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்களது அனுபவம் நல்லபடியான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்லும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.