ஆதித்யா-எல்1 திட்டம் விண்வெளி ஆராய்ச்சிக்கான புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
The launch of Aditya-L1, India's first solar mission, is a landmark achievement that takes India’s indigenous space programme to a new trajectory. It will help us better understand space and celestial phenomena. I congratulate the scientists and engineers at @isro for this…
— President of India (@rashtrapatibhvn) September 2, 2023
”இந்தியாவின் முதல் சூரியப் பயணமான ஆதித்யா-எல்1-ன் ஏவுதல், இந்தியாவின் உள்நாட்டு, விண்வெளித் திட்டத்தை ஒரு புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் ஒரு முக்கிய சாதனையாகும். இது விண்வெளி மற்றும் வான நிகழ்வுகளை நன்கு புரிந்துகொள்ள உதவும்.
இந்த சாதனைக்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த திட்டம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.