அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னா் இன்று வெளியிட்ட அறிவிக்கை மூலம், பின் வருபவர்களை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளார்.
வழக்கறிஞர் சிபோ சங்கர் மிஸ்ரா, ஒரிசா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். நீதித்துறை அதிகாரி ஆனந்த சந்திர பெஹெரா, ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
நீதித்துறை அதிகாரி புடி ஹபுங், குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
கேரள உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி சுதா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.