உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் கொடிகட்டி பறக்கின்றனர்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது, உலக வங்கியின் தலைவராக அஜய் பங்கா உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த இவர் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள IIM ஆகியவற்றில் பொருளாதாரப் படிப்புகளை முடித்தார்.
இதைத்தொடர்ந்து, நெஸ்லே, பெப்சிகோ நிறுவனங்களில் பணியாற்றினார். அதன்பிறகு 2007-ல் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்ற இவர், 2010 முதல் 2021 வரை `மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியிலும், அமெரிக்கன் செஞ்சிலுவைச் சங்கம், Temasek Holdings. Dow Chemical Company ஆகியவற்றின் உயர் பதவிகளில் பணியாற்றினார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வர்த்தகக் கொள்கை மற்றும் பேச்சுவார்த்தை தொடர்பான ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இவ்வாறு பல முக்கிய நிறுவனங்களில் உயர் பொறுப்புகளிலிருந்த அஜய் பங்கா, 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக வங்கியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் உலக வங்கியின் தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.
இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.