சனாதன தர்மம் குறித்த தமிழக அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை,
“சனாதன தர்மம் குறித்த உதயநிதியின் பேச்சை நாட்டில் உள்ள 142 கோடி மக்களும் எதிர்க்க வேண்டும். ஏனெனில்,இந்துமதத்துக்கு மதத்துக்கு எதிராக அவர் வெறுப்பை விதைத்திருக்கிறார்.
அவரது உரை எழுதப்பட்டு, வரிக்கு வரி அவரால் பேசப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்புக்கான அழைப்பு.
சனாதன தர்மம் என்ற வார்த்தை கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு முன் உருவானது. சனாதன தர்மம் என்பது நிலையானது; அழிவில்லாதது என்பது பொருள்.
சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என்றால் எல்லாக் கோயில்களையும் அழிக்க வேண்டும்; மக்களின் ஆன்மிக பழக்க வழக்கங்களை அழிக்க வேண்டும். சனாதன தர்மத்தை அழிக்க உதயநிதி ஸ்டாலின் யார்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.