மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் நல்ல திட்டம். இந்த திட்டத்தை, விரைவாக நடைமுறைபடுத்த வேண்டும். தற்போது, நடைபெற்ற வரும் தேர்தல் அனைத்தும் மக்களுக்கான தேர்தல் கிடையாது.
இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அனைத்து தேர்தல்களையும், ஒரே கட்டத்தில் நடத்த வேண்டும். அமெரிக்காவைப் போல நான்காண்டு ஆட்சி முறை கொண்டு வரவேண்டும்.
விகிதாச்சாரத் தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும். எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறையை, புதிய தமிழகம் கட்சி முழு மனதோடு வரவேற்கிறது.
சனாதனத்தின் அர்த்தம். வேண்டுமென்றே இவர்கள் இந்துக்களைக் காயப்படுத்தும் விதமாக பேசுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றித் தெரியாமலே பேசி வருகிறார்.
சனாதனத்தையும், சமூக நீதியையும் அழித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவிலுக்குள், ஒரு மக்களை அழைத்துச் செல்லுங்கள் பார்க்கலாம். அந்த தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியவர்,
திமுக அரசு மதுவிலக்கை கண்டு கொள்வதில்லை. பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இடையே சாதி மனப்பான்மை மேலோங்கி வருகிறது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக்கூடிய மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது.
திருநெல்வேலி, நாங்குநேரியில் சின்னத்துரை என்ற மாணவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. நாங்குநேரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம்.
நாங்குநேரி மாணவன் தாக்குதல் சம்பவத்திற்குத் திமுகக் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி என யாரும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. அறிக்கை மட்டும்தான் வெளியிட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.