ஓமன் நாட்டில் நடந்த ஆடவர் ஆசியா கோப்பை 2023 ஹாக்கி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது
FIH ஆண்கள் ஹாக்கி 5 உலகக்கோப்பை 2024 க்கான ஆசியாவின் தகுதி போட்டியாகவும் இது அமைந்தது.
இந்த முக்கிய இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 4-4 என்ற கணக்கில் தோற்கடித்தது. அதனால் இந்திய அணி FIH ஆண்கள் ஹாக்கி 5 உலகக்கோப்பை 2024 க்கு தகுதிப்பெற்றது.
இந்தியாவில் முகமது ரஹீல் 19,26 ஆகிய நிமிடங்களிலும், ஜுக்ராஜ் சிங் 7 வது நிமிடத்திலும், மற்றும் மனிந்தர் சிங் 10 வது நிமிடத்திலும் தங்களது இலக்கை அடைந்தனர், அதே நேரத்தில் குர்ஜோத் சிங் மற்றும் மனிந்தர் சிங் ஆகியோர் ஷூட்-அவுட்டில் இந்தியாவுக்காக கோலடித்து தங்கள் வெற்றியை பதிவு செய்தனர். பாகிஸ்தான் தரப்பில் அப்துல் ரஹ்மான் 5வது நிமிடத்திலும், கேப்டன் அப்துல் ராணா13 வது நிமிடத்திலும் , ஜிக்ரியா ஹயாத்14 வது நிமிடத்திலும் , அர்ஷத் லியாகத்19 வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
வெற்றிப் பெற்ற இந்திய அணிக்கு ஹாக்கி இந்திய தலைவர் திலிப் டிர்கி வாழ்த்து தெரிவித்தார், மேலும் அவர், ” ஓமனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காகவும் கடுமையான போட்டிக்குப் பிறகு வெற்றிப் பெற்றதற்காகவும் அணியை வாழ்த்த விரும்புகிறேன். இந்தப் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக விளையாடினர். மேலும் எங்களது பலமாத கடின உழைப்பு மற்றும் தயாரிப்புகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மேலும் இவர்கள் உலகக்கோப்பைப் போட்டிக்கு தகுதிப் பெற்றது குறித்து பெருமைப்படுகிறேன். இன்னும் அவர்கள் பிரகாசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.