ஆசிய உலகக்கோப்பை 2023 இன்றைய ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது. பல்லேகலே மைதானத்தில் நடந்த முந்தையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி முழுமையாக நடைபெறாமால், மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்றையப் போட்டி முழுமையாக நடைபெற வேண்டும் என்பதே இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய அணி இதுவரை ஏழு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. ஆசிய உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை இந்திய அணி தான் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்னும் பெருமையோடு உள்ளது. ஆனால் நேபாளம் அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பலமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி உள்ளனர்.போட்டி தொடக்கத்தில் இவர்கள் ஆட்டம் இழக்காமல் இருந்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் பலவீனமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை கூறுகிறார்கள்.
மேலும், நேபாளம் அணியிடம் வெற்றிபெறுவதற்கான ஆற்றல் உள்ளது ஆனால் இதுவரை அவர்கள் சர்வதேச அரங்கில் தங்களது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் சீரற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.
மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 98% இந்தியா வெற்றிப் பெறும் என்றும் 2% மட்டுமே நேபாளம் வெற்றிப் பெறும் என்றும் வளையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.