சேகர்பாபு அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார், உடனடியாக பதவி விலக வேண்டும், இல்லையென்றால் செப்டம்பர் 11 ஆம் தேதி இந்து சமயஅறநிலைத் துறை அலுவலகத்தில் போராட்டம் நடைப்பெறும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில்,
In the meeting on Eradication of Sanatana Dharma, DK Leader Thiru K. Veeramani confirmed that Sanatana Dharma & Hindu Religion are the same.
Later in the same meeting, Thiru @Udhaystalin asked for eradication of Sanatana dharma. TN’s HR&CE Minister Thiru @PKSekarbabu was in the… pic.twitter.com/MhuAR6yuAv
— K.Annamalai (@annamalai_k) September 4, 2023
சனாதன தர்மம் ஒழிப்பு குறித்த கூட்டத்தில், சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்பதை திமுக தலைவர் கி.வீரமணி உறுதிப்படுத்தினார். பின்னர் அதே கூட்டத்தில் உதய்ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்து மதத்திற்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சுக்கும் மேடையில், தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார்.
இதில் அவா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டார், மேலும் அவா் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவா் செப்டம்பர் 10ஆம் தேதிக்கு முன் பதவி விலகவில்லை என்றால், தமிழக பாஜக சார்பில் செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திலும் முற்றுகை போராட்டங்கள் தொடரும்! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.