நாட்டின் 8 முக்கிய கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகப் புள்ளி விவரங்களில், கடந்த ஜூலை மாதத்தில் நிலக்கரி, இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் துறையின் சிறப்பான செயல்பாடு காரணமாக 8 முக்கிய கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தியும் 8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், எஃகு, சிமெண்ட், மின்சாரம் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்த முக்கிய கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் ஜூலை மாத வளர்ச்சி அதிகமாகும்.
2023-24 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலாண்டில் முக்கியக் கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி 4.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.