“அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, ராகுல் காந்தியும், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரும் மவுனம் காப்பது ஏன். இதற்கு அவர்கள் என்னபதில் சொல்லப் போகிறார்கள்”என பாஜக செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சென்னையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது, பேசிய அவர், ஹிந்து மதத்திற்கு எதிராகவும். சனாதன தர்மத்திற்கு எதிராகவும் அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அமைச்சர் உதயநிதியின் இந்தப் பேச்சுக்கு, நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், என்பதுதான் சனாதனம்.
I.N.D.I.A கூட்டணியில் உள்ளவர்கள் இந்துவுக்கு எதிரானவர்கள். அதனால்தான், அமைச்சர் உதயநிதியின் பேச்சைக் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்க்கின்றனர்.
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு, ராகுல் காந்தியும், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?. அவர்கள் இந்த விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?
இதிலிருந்தே அவர்கள், இந்து விரோதிகள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம் என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.