ஆசிய உலகக்கோப்பை 2023-யின் இன்றைய கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
ஆசிய உலகக்கோப்பை 2023 இன்றைய ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள கடாபி ம மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்கியது .
இலங்கை அணி இதுவரை ஆறு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. கடந்து ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் இலங்கை அணி வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை ஆசிய கோப்பையை வென்றதே இல்லை.
இலங்கை அணியின் வீரர்கள் அனுபவம் இல்லாத இளம் வீரர்களாக உள்ளனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் அணிக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் திறமை வாய்ந்த வீரர்கள். ஆனால் அவர்களால் இந்த ஆசிய கோப்பை அழுத்தத்தை சமாளிக்க முடியாது என்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களோடுப் போட்டியிட முடியாது என்றும் பல தரப்பு மக்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த தொடரில் 2ஆம் போட்டியாக நடந்த வங்காளதேசம் மற்றும் இலங்கை போட்டியில் இலங்கை அணி தான் வெற்றிபெற்றது.
மேலும் ஆப்கானிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் வலிமையாக உள்ளது அதனால் அவர்கள் 10 ஓவர்கள் வரை ஆட்டமிழக்காமல் இருந்தால் போட்டியை வெற்றிப்பெற வாய்ப்புள்ளது மேலும் இந்த அணியின் ஸ்பின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. இந்த அணியின் விக்கெட் கீப்பர் ரஹ்மத்துல்லாஹ், அவரிடம் வரும் பந்துகளை தவறவிடாமல் பிடிக்கும் திறனை கொண்டவர். இருப்பினும் வங்காளதேசத்துடன் நடத்த முந்தைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 63% இலங்கை வெற்றிப் பெறும் என்றும் 37% ஆப்கானிஸ்தான் வெற்றிப் பெறும் என்றும் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.