இந்தியாவுக்குப் பதில் பாரத் என்று என்று பெயர் சூட்ட மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்கு அச்சாரமாக இந்தியப் பிரதமர் என்பதற்கு பதிலான பாரத பிரதமர் என்றும், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரதக் குடியரசுத் தலைவர் என்றும் அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி தலைமையில் 28 கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. இக்கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாடனாவில் நடந்தது. பெங்களூருவில் நடந்த 2-வது கூட்டத்தில் இக்கூட்டணிக்கு I.N.D.I.A. என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இந்தியா என்கிற நாட்டின் பெயரை எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு சூட்டி இருப்பதால், இந்தியா என்கிற பெயரை பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மத்திய அரசு தவிர்த்து வருகிறது.
அந்த வகையில், “இந்தியா” என்று தொடங்கும் குற்றவியல் சட்டங்களை “பாரதிய” என்று மாற்றும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து, இந்தியா என்கிற நாட்டின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கான முயற்சியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு இறங்கி இருக்கிறது.
‘The Prime Minister Of Bharat’ pic.twitter.com/lHozUHSoC4
— Sambit Patra (@sambitswaraj) September 5, 2023
இதற்கு அச்சாரமாக, ஜி20 மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து கொடுக்கும் அழைப்பிதழிலும், பிரதமரின் இந்தோனேஷியா பயண அழைப்பிதழிலும் இந்தியா என்கிற வார்த்தை தவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, “President of India” என்பதற்கு பதிலாக “President of Bharat” என்றும், “Prime minister of India” என்பதற்கு பதிலாக “Prime minister of Bharat” என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்தப் பெயர் மாற்றத்தை பா.ஜ.க.வினர் பலரும் வரவேற்றிருக்கிறார்கள். மேற்கண்ட அழைப்பிதழை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசியகீதத்தில் இடம்பெற்றிருக்கும் “பாரத பாக்ய விதாதா” என்ற வார்த்தைகளையும் குறிப்பிட்டிருக்கிறார்.
REPUBLIC OF BHARAT – happy and proud that our civilisation is marching ahead boldly towards AMRIT KAAL
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 5, 2023
அதேபோல, மேற்கண்ட அழைப்பிதழை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ், “பாரத குடியரசு” என்று தெரிவித்திருப்பதோடு, “நமது நாகரிகம் துணிச்சலான அமிர்த காலத்தை நோக்கி வலிமையாக பயணிப்பது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், மத்திய இணை அமைச்சர்கள் மீனாட்சி லேகி, உள்ளிட்டோரும் பாரத் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.
In this video from 2014, a wonderful explanation by @SadhguruJV on the science behind the name, and importance of calling our country Bharat.
The country getting renamed Bharat will happen through Parliament, but this World Cup our Team must play with the name “Bharat” @JayShah pic.twitter.com/h7vTW88whB
— Virender Sehwag (@virendersehwag) September 5, 2023
இது தவிர, பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோரும் வரவேற்றிருக்கிறார்கள். இதுகுறித்து கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு பெயர் நமக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். நாங்கள் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். எங்களது அசல் பெயரான ‘பாரத்’ என்பதை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. @BCCI @ஜெய்ஷா இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
T 4759 – 🇮🇳 भारत माता की जय 🚩
— Amitabh Bachchan (@SrBachchan) September 5, 2023
அதேபோல, அமிதாப் பச்சன் தன்னுடைய பதிவில், “பாரத் மாதா கீ ஜெய்” (பாரத அன்னை வாழ்க) என்று குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல, பல்வேறு பிரபரலங்களும் பாரத் என்கிற பெயர் மாற்றத்திற்கு வரவேற்பையும், ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, வரும் 18-ம் தேதி தொடங்கும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.