சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை !
Sep 4, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை !

Web Desk by Web Desk
Sep 6, 2023, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை 2023 நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானில் உள்ள கடாபி மைதானத்தில் நேற்று நடந்த 6 வது லீக் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர், இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 121 ரன்களில் இருந்த போது அணியின் 4வது விக்கெட்டும் பறிபோக, அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் ரன்ரேட்டை முகமது நபி மற்றும் ஹஸ்மதுல்லா ஷாகிதி கூட்டணி மளமளவென உயர்த்தியது. குறிப்பாக அதிரடியாக ஆடிவந்த முகமது நபி 24 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் விளாசினார். 24 பந்துகளில் அரைசதம் விளாசியதால், முகமது நபி அதிவேகமாக அரை சதம் விளாசிய ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமைப் பெற்றார்.

சிறப்பாக விளையாடி வந்த நபி, தீக்‌ஷனா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். இவர் 32 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 65 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் வந்த கரீம் ஜனட் ஷாகிதியுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் கிடைத்த பந்துகளைப் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வந்தனர். ஆனால் இருவரும் இலங்கை அணியின் துனித் வீசிய 32வது ஓவரில் பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆகி தங்களது விக்கெட்டை இழந்தனர். அடுத்தடுத்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் இழந்ததால் ஆஃப்கானிஸ்தான் அணி நெருக்கடிக்கு ஆளானது.

அதன் பின்னர் இணைந்த நஜிபுல்லா மற்றும் ரஷித்கான் கூட்டணி ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்ற வகையில் இருவரும் சிறப்பாக விளையாடினர். 36வது ஓவரில் நஜிபுல்லாவும், 38வது ஒவரின் முதல் பந்தில் ரஹ்மானும், மூன்றாவது பந்தில் ஃபரூக்கியும் தங்களது விக்கெட்டை இழக்க, 38.3 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் சார்பில் ரஜிதா 4 விக்கெட்டுகளும், தனஞ்செயா மற்றும் துனித் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Tags: asian cup cricketsrilanka cricket
ShareTweetSendShare
Previous Post

ஜூனியர் அரசியல்வாதி: உதயநிதிக்கு மம்தா “குட்டு”!

Next Post

ஜி 20 மாநாடு: ஜொலிக்குது டில்லி!

Related News

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

அதிகார போதையில் பாக்.,ராணுவ தளபதி – பொம்மை பிரதமராகும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி!

முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளான டோல்ஸ் வென்டோ சொகுசு கப்பல்!

சேலம் மாவட்டத்தில் 1 மாதத்தில் ரேபிஸால் மூவர் பலியான சோகம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜோகோவிச் விளையாடியதை கண்டு ரசித்த தோனி!

ராஜஸ்தான் : வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கோவை : போலி முகவரியில் சிம் வாங்கிய வழக்கு – மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்!

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது : பிரதமர் மோடி பெருமிதம்!

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்

புதுச்சேரியில் ஏழை மாணவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் – கட்டணம் செலுத்த முடியாமல் அவதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

சென்னை : விசாரணைக்காக சென்ற ரோந்து பணி காவலர் மீது தாக்குதல்!

ஜெர்மன் காப்பகத்தில் பராமரிப்பில் உள்ள இந்திய பெண் குழந்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies