புதுடில்லியில் செப் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாட்டு நடைபெற உள்ளது. இதில் இருபது நாடுகள் பங்கேற்க உள்ளது.
இந்த ஆண்டு ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது.
இந்த ஜி 20 மாநாடுக்காக டில்லியில் வேலைகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. மாநாடு நடக்கும் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் செய்யப்பட்ட சிறப்பான ஏற்பாடுகளால் நகரெங்கும் ஜொலிக்கிறது. மாநாட்டில் சர்வதேச பொருளாதார நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
சர்வதேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம், உலக வர்த்தகத்தில் 75 சதவீதம், உலக மக்கள் தொகையில் 66 சதவீதம், நிலப்பரப்பில் 70 சதவீதம் இந்நாடுகளில் இருப்பதால், உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக உள்ளது.
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு தான் ஜி 20. இதன் தலைமை பொறுப்பை 2022 டிசம்பர் 1 ஆம் தேதி இந்தியா ஏற்றது. 2023 நவம்பர் 30 வரை இப்பொறுப்பில் இருக்கும். இதில் எடுக்கப்படும் பொருளாதார முடிவுகள் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்பது மையக்கருத்தாக உள்ளது.