உதயநிதியைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!
Oct 26, 2025, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உதயநிதியைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 6, 2023, 09:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“இந்து மதத்தை அழிப்பேன்” என பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு அனைவருக்கும் ஆனதா? இல்லை இந்து விரோத அரசா? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. தொடர்ந்து, இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் இழிவுபடுத்துவது, புண்படுத்துவது திமுகவின் வாடிக்கையாகி வருகிறது.

திமுக அரசு தோல்விகளை மறைக்க, மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்ப, தனது இளவரசருக்கு மகுடம் சூட்ட இந்துமத எதிர்ப்பு என்கின்ற ஆயுதத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு என்கின்ற கூட்டத்தில் திமுகவின் இளவரசர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலேரியா, டெங்கு, கொரோனா போன்றவற்றுடன் இந்து மத நம்பிக்கைகளை ஒப்பிட்டு அவற்றை ஒழிக்க வேண்டும் என்று பேசி உள்ளார். சமஸ்கிருதத்தையும் எதிர்த்துள்ளார் உதயநிதி.

ஒரு விஷயத்தை அறியாமல் போனது கேலிக்கூத்தான விஷயம். அவருடைய உதயநிதி என்ற பெயரே வடமொழிச் சொல்தான். எந்த விஷயத்தையும் தங்களிடமிருந்தே திமுக ஆரம்பிப்பதுதான் நல்லது. அதன்படி, முதலில் உதயநிதி தன்னுடைய குடும்பத்தில் சனாதனத்தை ஒழித்து விட்டு வரட்டும். தன் பெயரையும் உதயநிதி மாற்றிக் கொள்வாரா?

தன்னைப் பகிரங்கமாக ஒரு கிறிஸ்தவன் என்றும், தன் மனைவி கிறிஸ்தவர் என்றும் சொல்லிய உதயநிதி ஸ்டாலினுக்கு இந்து மதத்தை விமர்சிக்க என்ன தகுதி இருக்கின்றது?

நடைபெற்ற மாநாட்டில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் இந்துக்கள் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் சடங்குகள் சம்பிரதாயங்களைக் கொச்சைப்படுத்துவதுடன், அவற்றை ஒழிக்க வேண்டும் என்பதாக உள்ளது.

இந்துக்கள் செய்யும் சடங்குகளை எல்லாம் ஒழித்து விட்டுப் புதிதாகச் சடங்குகள் செய்யும் வகையில் வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நேரடியாக இந்து மதச் சடங்குகளை அழித்து இந்து மதத்தை அழிக்கும் முறையே ஆகும்.

மேலும், உதயநிதி ஸ்டாலினும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் தமிழக அரசு மத வழிபாடு சம்பந்தமான எந்த ஒரு நிர்வாகத்தையும் செய்யக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அப்படி என்றால், அந்த தீர்மானத்தின்படி அந்த மாநாட்டில் கலந்து கொண்டு அந்த தீர்மானத்தை ஆதரித்த ஏற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு இந்துக் கோயில்களை நிர்வாகிக்கும் பொறுப்பில் இருந்து மாநில அரசு வெளியேற வேண்டும் என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

அப்படி என்றால் சேகர் பாபு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீடிக்கலாமா நியாயம்தானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தொடர்ந்து திமுக தோல்விகளைச் சந்திக்கும் பொழுதும், பிரச்சனைகளை திசை திருப்புவதற்கும், ஹிந்து மத எதிர்ப்பு, சனாதனம் போன்ற ஆயுதங்களைக் கையில் எடுத்து வருகிறது. இதை இந்துக்கள் தட்டிக் கேட்க மாட்டார்கள் சகித்துக் கொள்வார்கள் என்கின்ற அலட்சிய மனோபாவத்தைக் காட்டுகிறது.

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க, நடைமுறையில் இல்லாத ஒரு நடைமுறை இருப்பதாகப் பாவ்லா காண்பித்து அதை கையிலெடுத்து, அதை ஒரு பரபரப்பு செய்தி ஆக்க வேண்டிய அவசியம் உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன உள்ளது?

அரசியல் சட்டப்படி பதவிப்பிரமாணம் ஏற்றுள்ள அமைச்சர் ஒருவர், அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும். அனைவரின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும்.

ஆனால், உதயநிதி ஸ்டாலின் இந்து மத எதிர்ப்பை கையில் எடுத்துக் கொண்டு இந்துக்கள் மனம் புண்படும்படி நடப்பதும், பிறகு அதனைச் சமாளிக்க நான் சனாதனத்தைத் தான் எதிர்த்தேன் என்று கூறுவதும், பேசுவதும் அவர் ஏற்றுக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிரானது.

தொடர்ந்து, இந்து மதத்தை எதிர்த்து விமர்சித்துக் கொச்சைப்படுத்தி இழிவு படுத்தி வருகிற திமுகவையும் உதயநிதி ஸ்டாலினையும் இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் மீது மாநில அரசாங்கம் கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆளுநர் உதயநிதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

உதயநிதி ஸ்டாலினை கண்டித்து இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் வரும் செப்டம்பர் 7 -ம் தேதி வியாழக்கிழமை மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

Tags: kadeswara subramaniamhindu munnanai
ShareTweetSendShare
Previous Post

ஜி 20 : பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

Next Post

இந்தோனேஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி!

Related News

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies