ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமி நாளான இன்று கிருஷ்ண ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தியான இன்று, கிருஷ்ணர் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருவார் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை குழந்தையின் கால் தடங்கள் பதிந்தும், வீடுகளில் கிருஷ்ணர் சிலை வைத்தும், கிருஷ்ணருக்குப் பிடித்த வெண்ணெய், சீடை, அதிரசம், உள்ளிட்டவற்றை நெய்வேத்தியம் வைத்து வழிபாடு செய்தனர். மேலும், தங்கள் வீட்டுக் குழந்தைகளைக் கிருஷ்ணராக, ராதாவாக நினைத்து, அவர்களுக்குச் சிறப்பு வேடங்கள் அணிவித்து மகிழ்ந்தனர்.
மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், ஹரி நாம சங்கீா்த்தனம், வண்ண மலா்களால் அலங்காரம், தீபாராதனைகள் ஆகியவை நடைபெற்றன. இதைதொடர்ந்து, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். மேலும், வண்ணமயமான பானைகளில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் பிரசாதங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன.