மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கோல் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறுவனத்தின் உற்பத்தி 5.23 கோடி டன்னாக இருந்தது.
முந்தைய ஆண்டு இதே மாதத்தில் 4.62 கோடி டன்னாக உற்பத்தி இருந்தநிலையில், தற்போது 13.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 5.12 கோடி டன்னாக இருந்த நிறுவனத்தின் நிலக்கரி விநியோகம் இந்த ஆகஸ்ட்டில் 5.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது 15.3 சதவீத உயர்வாகும்.
மேலும், நடப்பு நிதியாண்டில் இது வரை 28.15 கோடி டன் நிலக்கரியை நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 11.1 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டு ஏப்ரல் – ஆகஸ்ட் காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த நிலக்கரி விநியோகம் 8 சதவீதம் அதிகரித்து 30.55 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது 38.31 மெட்ரிக் டன்னாக இருந்தது.
கடந்த ஆகஸ்ட் 31-ந் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் நிலக்கரி இருப்பு 4.53 கோடி டன்னாக உள்ளது. இது 2022-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 46 சதவீதம் அதிகமாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.