\சென்னை மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், வரும் 10-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் மேட்லி சாலை சுரங்கப்பாதைக்கு அருகே அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவில்.
இது சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவில் ஆகும். இங்குள்ள மூலவர் சுயம்பு மூர்த்தியாவவார்.
இந்த கோவிலின் அனைத்துச் சன்னதிகள் மற்றும் அதன் கோபுரங்கள், 7 நிலைகளுடன் கிழக்குத் திசையில் ராஜகோபுரம், தெற்கு திசையில் 3 நிலைகளுடன் ராஜ கோபுரம், கொடி மரம், நந்தி மண்டபம், வசந்த மண்டபத்தில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி நடைபெற்றன.
பல கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட திருப்பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது.
திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது திருக்கோவில் கும்பாபிஷேக விழா முகூர்த்தக்கால் நடுதலுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம், வேதிகார்ச்சனை, யாக வேள்வி மற்றும் திரவிய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.
இந்த நிலையில், வரும் ஞாயிறு 10.9.2023 காலை 6.30 முதல் 8 மணிக்குள் சென்னை, அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவையொட்டி, திருக்கோவிலில் ராஜகோபுரம் முதல் அனைத்து பகுதிகளும் அழகிய வடிவில் ஜொலித்து வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.