தமிழகத்தில் உள்ள 3 பல்கலைக் கழகங்களுக்கான தேடுதல் குழுவில் யுசிஜி, பிரநிதிகளைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பல்கலைக் கழகம், கல்வியியல் பல்கலைக் கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக் கழகம் என 3 பல்கலைக் கழகங்களுக்குத் துணை வேந்தர் பணி இடங்கள் காலியாக இருந்தது.
இந்த நிலையில், துணை வேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளைத் தமிழக அரசு, மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைத்தது.
துணை வேந்தர் நியமனத்தில், யுஜிசி பிரநிதியை நியமிக்க வேண்டும் என ஆளுநர் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், மேதகு ஆளுநரின் உத்தரவை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் செய்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 3 பல்கலைக் கழகங்களுக்கான தேடுதல் குழுவில், தலா 4 உறுப்பினர்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.
இதில், சென்னை பல்கலைக் கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக் கழகத்தில், தமிழக அரசின் பிரநிதி இல்லை. ஆனால், கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் மட்டும் தமிழக அரசின் பிரதிநிதி உள்ளார்.
இவ்வாறு, ஆளுநர் அமைத்த குழவில், பல்கலைக் கழங்களின் வேந்தர் என்ற முறையில் ஆளுநரின் சார்பில் ஒருவர், பிரதிநிதி ஒருவர், செனட் குழுவைச் சேர்ந்த ஒருவர், யுசிஜி ஒருவர் என மொத்தம் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.