வங்கதேச அணிக்கு எதிரான முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி 194 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் சூப்பர் 4 சுற்றுப் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி வங்கதேச அணியில் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக லிட்டன் தாஸ் அணியில் இடம் பெற்றார். இதே போன்று பாகிஸ்தான் அணியில், முகமது நவாஸிற்குப் பதிலாக பாஹீம் அஷ்ரப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து முதலில் விளையாடிய வங்கதேச அணி 38.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஷாகில் அல் ஹசன் 53 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக வங்கதேச அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. பந்து வீச்சு தரப்பில் பாகிஸ்தானின் ஹரீஷ் ராஃப் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும், ஷாஹீன் அஃப்ரிடி, இப்திகார் அகமது மற்றும் பாஹீம் அஷ்ரப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. அதன்படி ஃபஹர் ஜமான் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இமான் உல் ஹக் அதிரடியாக விளையாடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் பாபர் அசாம் 17 ரன்களில் ஆட்டமிழக்க முகமது ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 79 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அகா சல்மான் 12 ரன்கள் எடுத்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.