வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றதை அடுத்து, இந்திய அணிக்கு எதிரானப் போட்டுக்குத் தயாராக உள்ளோம் என்று பாபர் ஆசாம் பேட்டி அளித்துள்ளார்.
2023 ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 மோதலில் வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான், லாகூரில் வெப்பமான வானிலை இருந்தபோதிலும், பரபரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக வேகப்பந்து வீச்சாளர்களை பெருமைப் படுத்தி பேசினார், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்.
மேலும் ஆடுகளத்தை மதிப்பிட்ட பிறகு முகமது நவாஸை விட ஃபஹீம் அஷ்ரப்பை தேர்வு செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்ததாகக் கூறினார்.
இதை குறித்து அவர், ” இந்த மைதானத்தில் அதிகளவு வெப்பம் இருந்தது அதை சமாளித்து சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளர்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். இந்தப் போட்டியில் நாங்க ஃபஹீமை பிளையிங் 11 னில் தேர்வு செய்தோம் ஏனென்றால் போட்டிக்கு முன்பு இந்த மைதானத்தைப் பார்வையிடத்தில் வழக்கத்திற்கு மாறாக நிறையப் புல் இருந்தது அது எங்கள் அணியின் பந்துவீச்சுக்கு ஏற்றதாக அமைந்தது” என்று கூறினார்.
மேலும் அவர், எப்போதும் நாங்கள் இங்கு விளையாடும் போது இரசிகர்களின் ஆதரவுக் கிடைக்கிறது. இன்று எங்கள் போட்டியை உற்சாகமாக இரசிகர்கள் கண்டுகளித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
வங்கதேச அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு எதிரானப் போட்டிக்கு எங்களை ஊக்குவிக்கிறது. இந்திய அணிக்கு எதிரானப் போட்டுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். அந்த போட்டியில் எங்களுடைய 100% காண்பிப்போம் என்றும் கூறினார்.