அரசு அதிகாரிகள் பணியின் போது ஐ – போன்களைப் பயன்படுத்துவதற்கு சீன அரசுத் தடை விதித்துள்ளதாக, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் அரசு அதிகாரிகள், ஐ-போன் மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் சாதனங்களை பணியின் போது பயன்படுத்தவோ அல்லது அலுவலகத்திற்கு கொண்டு வரவோ கூடாது என்று, அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.
இம்மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ – போன் மாடல் வெளியாக உள்ள நிலையில், இத்தகைய அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த தடை அறிவிப்பில் ஆப்பிள் தவிர வேறு தொலைபேசி தயாரிப்பாளர்கள் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்த தடை குறித்து சீனாவின் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று வால் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.