சனாதனம் குறித்து வெறுப்புப் பிரச்சாரம் செய்த திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக, அவர்களது கூட்டணி கட்சி தலைவர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு நேற்று, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருந்தா்ா. இந்த நிலையில், இன்று, உதயநிதிக்கு சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி. சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எம்.பி. சஞ்சய் ராவத், உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஒரு அமைச்சர். உதயநிதியின் சனாதனத்தின் மீதான வெறுப்பு பேச்சை நான் மட்டுமல்ல, யாருமே ஆதரிக்க மாட்டார்கள்.
இதுபோன்ற வெறுப்பு பேச்சு மற்றும் அறிக்கைகளை வெளியிடுவதை உதயநிதி ஸ்டாலின் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது தி.மு.க.வின் பார்வை அல்லது அவரது தனிப்பட்ட கருத்தாகக் கூட இருக்கலாம். ஆனால், சுமார் 90 கோடி இந்துக்கள் இந்த நாட்டில் வாழ்வதால், அவர்களது கருத்தையும் நாம் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் இந்து மட்டுமல்லாது மற்ற மதத்தினரும் பலரும் வாழ்து வருகிறார்கள். அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்த கூடாது.
மு.க.ஸ்டாலின் எங்களுடன் இணைந்துள்ளார். எனவே, அவருக்கு நெருக்கமானவர்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன்னர், தங்கள் வார்த்தைகளை கவனத்தில் கொண்டு பேச வேண்டும் என கண்டித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் வெறுப்பு பேச்சுக்கு, நேற்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று அவர்களது கூட்டணியில் உள்ள முக்கியத் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உதயநிதியின் சனாதனம் வெறுப்பு பேச்சு, இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதால், திமுகவுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தால், இந்தியா கூட்டணியும் உடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.