6 மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், பெரும்பாலான தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர்.
கேரளா மாநிலத்தில், புதுப்பள்ளி தொகுதி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோசி தொகுதி காலியானதாகவும், மற்ற தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.
இதனால், 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், செப்டம்பர் 5-ம் தேதி, வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் செப்டம்பர் 8-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில், திரிபுரா மாநிலத்தில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும், காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை எண்ணப்பட்டது. தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தனர்.
இந்த நிலையில், வடகிழக்கு மாநிலமான திரிபுரா மாநிலத்தில் தன்புர் மற்றும் போக்ஸாநகர் தொகுதிகளில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல், உத்தரகண்ட் மாநிலத்தில், பாகேஷ்வர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பார்வதி தாஸ் அமோக வெற்றி பெற்றார்.
மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.