ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு. இவர் முதல்வராக பதவி வகித்த போது பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 250 கோடி வரை ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆந்திரக் காவல் துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன் “நான் கைது செய்யப் படலாம் என்று சந்திரபாபு நாயுடு கூறியிருந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார் .