திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற செப்டம்பர் 12-ந் தேதி தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் 18-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, செப்டம்பர் 12-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை ஏழுமலையான் கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
எனவே, 12-ந் தேதி விஐபி தரிசனத்தைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அன்று ஏழுமலையான் தரிசனமும் 5 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, செப்டம்பர் 11-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்துக்கான பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவாஸ்தானம் தெரிவித்துள்ளது.