உலக இந்தி தினம், மொழியின் மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்வதோடு, இந்தி பேசுபவர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதையும் வலியுறுத்துகிறது.
விஸ்வ ஹிந்தி திவாஸ் என்றும் அழைக்கப்படும் இந்தி மொழி நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியை பரப்புவதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் இந்தி நாளும் ஒன்று.
இந்தியில் வெளியாகும் கலை, இலக்கியம், கவிதை போன்றப் படைப்புகளில் சிறப்பானவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
சரித்திரத்தில் பின்நோக்கிச் சென்றால் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, ஏற்றுக் கொண்டது.
இந்தி மொழியை வளர்ப்பதற்காக, தொடங்கப்பட்ட ஆட்சி மொழித் துறை என்ற பிரிவு இந்தி மொழி நாளை 1975 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 14ம் தேதி அனுசரிக்கிறது.