ரஷ்யா புறப்பட்ட சர்பானந்த சோனாவால்!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்யா புறப்பட்ட சர்பானந்த சோனாவால்!

Murugesan M by Murugesan M
Sep 11, 2023, 03:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளாடிவோஸ்டோக்கில் நடைபெறும் கிழக்குப் பொருளாதார அமைப்பில், இந்தியா சார்பில் பங்கேற்க மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் ரஷ்யா புறப்பட்டார்.

ரஷ்யாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக்கில் நடைபெறும் கிழக்குப் பொருளாதார அமைப்பில், இந்தியாவின் பிரதிநிதியாக துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.

வலுவான உறவுகளைப் பேணுவதையும், பல்வேறு துறைகளில் வர்த்தக மற்றும் தளவாட ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், ரஷ்யாவின் தூரக் கிழக்கு மற்றும் ஆர்க்டிக் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலெக்ஸி செகுன்கோ, ரஷ்யாவின் போக்குவரத்து அமைச்சர் விட்டாலி சவேலிவ் ஆகியோரை அவர் சந்திக்க உள்ளார்.

கிழக்குப் பொருளாதார  அமைப்பில் உரையாற்றிய அமைச்சர் சோனாவால், “பிரதமர்  நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.

இந்தியா-ரஷ்யா உறவில் ஏற்பட்டுள்ள இந்தப் புதிய உத்வேகத்தைக் கருத்தில் கொண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரங்களான ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் மற்றும் இந்தியாவின் சென்னை ஆகியவற்றுக்கு இடையே மாற்று வர்த்தகப் பாதையை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

எனது பயணம் மற்றும் ரஷ்யாவின் தலைமையுடனான சந்திப்புகளின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வ வர்த்தக மற்றும் தளவாட ஒத்துழைப்பை வளர்ப்பது தவிர இந்த முக்கியமான முயற்சியில் நாம் முன்னேற்றம் காண முடியும் என்று நம்புகிறேன்” என்றார்

கிழக்குப் பொருளாதார அமைப்பில் இந்தியா-ரஷ்யா வர்த்தக உரையாடலில் உரையாற்றும் சோனாவால், இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற உத்திபூர்வ கூட்டாண்மைக்குள் நீடித்த மற்றும் நிலைத்தன்மையை வளர்ப்பதில் வர்த்தகம், வர்த்தகம் மற்றும் வணிகத்தின் முக்கிய பங்கை எடுத்துரைப்பார்.

கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த அமர்வில் இந்தியாவின் கப்பல் துறை அமைச்சர் உரையாற்றுவார். அதே நேரத்தில் வடக்குக் கடல் பாதையின் சாத்தியக்கூறுகளை ஆராய்வது மற்றும் வங்காள விரிகுடாவில் கப்பல்களில் சரக்குகளை மாற்றி இறக்கும்/ஏற்றும் மையத்தை நிறுவுவது உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்யக் கூட்டமைப்பின் மூத்த அமைச்சர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

கிழக்குப் பொருளாதார அமைப்பு, 2023-ன் கூட்டம் 2023 செப்டம்பர் 10-13 தேதிகளில் தூரக் கிழக்கு கூட்டாட்சிப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது. ரஷ்யாவின் தூரக் கிழக்கின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும், ஆசிய-பசிஃபிக் பிராந்தியத்தில் சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காகவும், 2015 ஆம் ஆண்டில் ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபர் விளாடிமிர் புட்டின் உத்தரவின் மூலம் கிழக்குப் பொருளாதார அமைப்பு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: central government minister
ShareTweetSendShare
Previous Post

வெளிச்சந்தையில் 1.66 லட்சம் மெ.டன் கோதுமை, 0.17 லட்சம் மெ.டன் அரிசி விற்பனை- மத்திய அரசு!

Next Post

சுவாமி விவேகானந்தர் உரை நல்லிணக்கத்திற்கான அறைகூவலாக இன்றும் எதிரொலிக்கிறது-பிரதமர் நரேந்திர மோடி!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies