தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை தொழிலதிபரும், மணல் குவாரி நடத்தி வருபவருமான ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவினர் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நிஜாம் காலனி பகுதியில் உள்ள அவரது வேதாந்தா அலுவலகத்திற்கு காலை 9.30 மணிக்கு 2 கார்களில் அமலாக்க பிரிவு அதிகாரிகள் வந்தனர்.
ஒரு கார் கேரள பதிவு எண்ணும், மற்றொரு கார் சென்னை பதிவு எண்ணும் கொண்டதாக இருந்தது. தொழிலதிபர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்குள் சென்ற அவர்கள் காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2016 ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடைபெற்றபோது, மணல் தொழிலில் இவர் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் 20 இடங்களில் சோதனை நடத்திய நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இடங்களில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.