ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் – காரணம் என்ன?
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் – காரணம் என்ன?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று காலை திடீரென டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு அமைப்பு சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை சம்பந்தப்படுத்திப் பேசினார். அவரது பேச்சு கடும் சர்ச்சையானது. பா.ஜ.க. உள்ளிட்ட தேசியக் கட்சிகளும், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யவும், அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்கவும் வலியுறுத்தியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சார்பில், தமிழக ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அதேபோல, நாடு முழுவதும் உதயநிதிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.

அடுத்து, சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு பேசினார். அவரது இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்பதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் ஆளுநரிடம் மனு தெரிவிக்கப்பட்டது.

பாஜகவின் கோரிக்கையை ஏற்று, 10-ம் தேதிக்குள் சேகர் பாபு, அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தமிழக பாஜக கெடு விதித்தது. ஆனால், அவர் பதவி விலகவில்லை. இதனால், 11-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு, பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

திமுக சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட, திமுக எம்பி ஆ.ராசா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் எச்ஐவி நோயாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பேசியதால், கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசாவுக்கு எதிராகத் தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் நலசங்கத்தின் நிர்வாகிகளும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சங்க நிர்வாகிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற சர்ச்சை தொடர்பாகவும், அதன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும், டெல்லியில் ஆலோசனை நடத்த, ஆளுநர் டெல்லி சென்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால், திமுகவில் உள்ள சிலரது பதவிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Tags: governor raviRN Ravi
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பண்டிகை: 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும் இரயில் முன்பதிவு!

Next Post

அதிர்ச்சி: தலைமைச் செயலகம் அருகே 3 பேர் தீக்குளிக்க முயற்சி!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies