விராட் கோலிக்கு ஆட்ட நாயகன் விருது ஏன் கொடுக்க வேண்டும்? என்று கெளதம் கம்பிர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2023 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த இரண்டு நாட்களாக கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்திய அணி அதிரடியாக விளையாடி 356 ரன்கள் எடுத்தது. இதில் ரோஹித் சர்மா மற்றும் கில் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் இறங்கிய விராட் கோலி 122 ரன்களும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் எடுத்து ஆட்டமிழக்காமால் இருந்தனர்.
அடுத்ததாக பந்துவீசிய இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ரன்கள் கொடுக்காமல் கட்டுப்படுத்தி அதிக விக்கெட்களையும் எடுத்தனர். அதில் குலதீப் யாதவ் 5 விக்கெட்களை எடுத்து அணிக்கு பெரும் பங்காற்றினார்.
இந்நிலையில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகன் விருது 122 ரன்களை அடித்த விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஏன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதுக் கொடுக்க வேண்டும் ? என கெளதம் கம்பிர் வேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், ” விராட் கோலியும், கே.எல்.ராகுலும் சிறப்பாக விளையாடி இருந்தாலும், குலதீப் யாதவ் அதைவிட சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். என்னை பொறுத்தவரை குலதீப்பிற்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும். அவரைத் தாண்டி வேறு எந்த வீரரையும் என்னால் யோசிக்க முடியவில்லை ” என தெரிவித்துள்ளார்.