பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளார். மணிலாவில் இருந்து வடக்கே 524 கி.மூ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான நிலையில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
ஏற்கனவே மொராக்கோவில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள மாரேஷ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 8.36 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்பொழுது வரை அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2,122 ஆக அதிகரித்துள்ளது.