திமுக அரசு ஊட்டி டீ-யை புறக்கணிக்கிறது!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசு ஊட்டி டீ-யை புறக்கணிக்கிறது!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டி டீ-க்காக 100 சதவீதம் டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்ற விதியை திமுக அரசு புறக்கணித்து வருவதாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பனருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஊட்டி டீ’க்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே டீ துள் கொள்முதல் செய்ய வேண்டும் ரேஷன் கடைகளில் ‘ஊட்டி டீ’ தூள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் பசுந் தேயிலைக்கு குறைந்தபட்ச விற்பனை விலையாக கிலோவுக்கு ரூ. 33.44 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள், கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் கோவை வந்த மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலை ‘நீலகிரி நாக்குபெட்டா படுகர் நலச் சங்க’ பிரதிநிதிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். பசுந் தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த மத்திய அமைச்சர், இது குறித்து ‘இந்திய தேயிலை வாரியத்’திடம் விளக்கம் கேட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் சிறு தேயிலை விவசாயிகளின் இந்தப் பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணவே, கடந்த 2001 -ம் ஆண்டு ஆட்சியில், ‘ஊட்டி டீ’ என்ற பெயரில் ரேஷன் கடைகளில் டீ தூள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான டீ தூள் 100 சதவீதமும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெறப்பட்டன. இதனால் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறு தேயிலை விவசாயிகள் பெரும் பயனடைந்து வந்தனர்.

ஆனால், தற்போதுள்ள திமுக அரசு ரேஷன் கடைகளில் விற்கப்படும் ‘ஊட்டி டீ’க்காக நீலகிரி மாவட்டத்தில் இருந்து 50 முதல் 60 சதவீதம் மட்டுமே டீ தூளை கொள்முதல் செய்கிறது. 40 முதல் 50 சதவீதம் டீ தூள் அசாம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பெறப்படுகின்றன.

தொடக்கத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கிலோ வரை விற்கப்பட்ட ஊட்டி டீ, தற்போது 2 லட்சம் கிலோ மட்டுமே விற்கப்படுகிறது. கடந்த ஆட்சியில், தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இதனை செயல்படுத்துவதில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை என்று தெரிகிறது. இதனால், நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்களின் நலன் கருதி, ரேஷன் கடைகளில், ‘ஊட்டி டீ’ தூள் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ‘ஊட்டி டீ’க்காக 100 சதவீத டீ தூளையும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமே பெற வேண்டும்.

இதற்காக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளிடம் பசுந் தேயிலையை நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில், முதலமைச்சர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: teavanathi srinivasan bjp
ShareTweetSendShare
Previous Post

ஞானவாபி மசூதி வழக்கு: 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Next Post

முதல்லே +2 பாடம் படிங்க!- சேகர் பாபு, உதயநிதி இருவருக்கும் அண்ணாமலை அறிவுறுத்தல்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies