சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பதவி வகித்த 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பதவி வகித்து வந்த ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சவுந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கச் சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதனை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, 5 நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாகப் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்குத் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.