திரிபுரா மாநிலத்தில், நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட முஸ்லீம் வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.
கேரளா மாநிலத்தில், புதுப்பள்ளி தொகுதி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோசி தொகுதி காளியானதாகவும், மற்ற தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவால் இந்த
7 தொகுதிகளுக்குச் செப்டம்பர் 5-ம் தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும், காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. இந்த நிலையில், பதிவான வாக்குகள் அனைத்தும் 8 -ம் தேதி எண்ணப்பட்டது.
இந்த நிலையில், வடகிழக்கு மாநிலமான திரிபுரா மாநிலத்தில் தன்புர் மற்றும் போக்ஸா நகர் தொகுதிகளில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக முறைப்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல், உத்தரகண்ட் மாநிலத்தில், பாகேஷ்வர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பார்வதி தாஸ் அமோக வெற்றி பெற்றார்.
குறிப்பாக, இந்த இடைத்தேர்தலில் திரிபுரா மாநிலத்தில் உள்ள தன்பூர் மற்றும் போக்ஸா நகர் சட்டமன்றத் தொகுதிகள் பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், அதனை உடைத்து, இந்த இரண்டு பாஜக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
66 சதவீதம் சிறுபான்மையினர்களை கொண்ட போக்ஸா நகர் சட்ட மன்ற இடைத்தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த வேட்பாளர் தஃபஜ்ஜால் ஹொசைன் 34 ஆயிரத்து 166 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெறும் 3,000 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால், 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தஃபஜ்ஜால் ஹொசைன் அமோக வெற்றி பெற்றார்.
பாஜகவில் வெற்றி பெற்ற முதல் முஸ்லீம் வேட்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் தன்பூர் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிந்து தேப்நாத் வெற்றி பெற்றுள்ளார்.
பாரத பிரதமர் மோடி, நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் செய்த சாதனைகளை உரிய முறையில் எடுத்துச் சொன்னதாலும், இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பான ஒரே கட்சி பாஜக என்றும் விரிவாக எடுத்துச் சொன்னதாலும், பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகவே வெற்றி பெற்றுள்ளதாக வேட்பாளர் தஃபஜ்ஜால் ஹொசைன் மற்றும் பிந்து தேப்நாத் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், பாஜகவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.