பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து, முதல் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பெங்களூரு விமான நிலையம், தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் இந்த விமான நிலையமும் ஒன்றாகும். இந்த விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், விமான போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக, மற்றொரு முனையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து, ரூ.5 ஆயிரம் கோடி செலவில் சர்வதேச தரத்தில் 2-வது முனையம் கட்டப்பட்டது. இந்த முனையத்தைக் கடந்த 2022 -ம் ஆண்டு நவம்பர் மாதம், பாரத பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பெங்களூரு விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு முதல் விமானம் புறப்பட்டது. 2-வது முனையத்தில் இருந்து அனைத்து பன்னாட்டு விமானங்களும், ஏர் – ஏசியா, ஏர் – இந்திரா, ஸ்டார் இந்தியா, விஸ்தாரா போன்ற நிறுவனங்களின் விமானங்களும் இயக்கப்பட்டன.
ஆனால், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, ஆகாசா ஏர் உள்ளிட்ட விமானங்கள் முதல் முனையத்தில் இருந்து வழக்கம் போல் இயக்கப்பட்டது. இதனால், பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.