உஜ்வாலா திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்க, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (பிபிஎல்) குடும்பங்களின் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் இணைப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டம் மே 2016 இல் பிரதமரால் தொடங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Following the decision to reduce the LPG prices by ₹200, Cabinet has approved the extension of #PMUY for the release of 75 lakh LPG connections, with a total financial implication of ₹1650 crore.
It will cover households that were earlier left behind or new households formed… pic.twitter.com/9wjlk5fr5E
— Anurag Thakur (@ianuragthakur) September 13, 2023
இது குறித்து தனது எக்ஸ் பதிவில், உஜ்வாலா திட்டத்தில் மானிய முறையில் சிலிண்டர் வழங்கும் திட்டம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2026ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் அமலில் இருக்கும். இதற்காக, ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தகுதியுள்ளவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.