வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் செப்டம்பர் 19-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோயம்பேடு, அண்ணாநகர், வளசரவாக்கம், போரூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகள் கனமழை பெய்தது.
இதேபோன்று, புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர், மதுரவாயல், பூவிருந்தமல்லி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று இரவு மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.